அருகில் இருந்த மின் விசிரி அயராமல் வெங்கட்டின் கரிய, அடர்ந்த தலைமுடியைக் கலைத்துக் கொண்டிருக்க, தன் முன் இருந்த ரெஜிஸ்டரில் அவசரமாக ஏதோ எழுதிக்கொண்டே தன் எடது கையைப் பார்த்தார். 12:30 இருக்கும் என்று தன் வயிறு காட்டிய மணியை 12:38 கை கடிகாரம் சரி செய்தது.
"ஸ்ஸ்ஸ்" என்றப்டியே பேனாவைக் கீழே வைத்துவிட்டு சிவானநத் இருக்கும் இடத்தை நோக்கி "சிவா!" என்றார். சிவா அவர் வழக்கமான அழைப்பின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு
"இன்னிக்கி நான் lunch எடுத்துட்டு வரலை. ஹோட்டலுக்குப் போய்தான் சாப்பிடணும்" என்று ஒரு புது அரட்டையைத் துவக்கினார் வெங்கட்.
"அட! நானும்தான்! வா போகலாம்"
ஹோட்டலில் இரண்டு "மீல்ஸ்" சொல்லிவிட்டு "அப்ரம்" என்றர்போல் எதிரே உட்கார்ந்து கொண்டு சில நொடிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"இந்த காலத்துப் பசங்களுக்கு கொஞ்ச்ம் கூட பொருப்பே இல்லை." என்று அமைதியைக் கலைத்தார் சிறிது கவலையாகக் காணப்பட்ட வெங்கட்.
"என்ன விஷயம்?" என்று சிவா நோண்ட,
"எல்லாம் என் பையன் விஷயம்தான்" என்று சலித்துக் கொண்டார்.
"அவனுக்கென்னன? IITல படிப்பை முடிச்சு ஒரு நல்ல வேலைல இருக்கான். கல்யாணமும் ஆகிடுச்சு. பேரன் ஒண்ணுதான் பாக்கி! இன்னும் என்ன கவலை? குழந்தை விஷ்யத்துல எதாவது முரண்டு பிடிக்கரானா?"
"இல்லை அதைப் பத்தியெல்லாம் என் பொண்டாட்டிதான் கவலைப் படுவா. நான் இல்லை"
"பின்ன?"
"நல்ல வேலையில் இருக்கன்னு சொன்னியே, அதுல தான் ப்ரச்சனை! அதை விடப்போரானாம்!"
(ஹோட்டல் "தம்பி" வநது இலையைப் போட தண்ணீர் தளித்து விட்டு சாப்பிடத் தயாரானார்கள்)
"என்னது வேலைய விடப்போரானா? நல்லாதானே சம்பாதிக்கறான்? அப்ரம் என்னவாம்? வேற வேலை கிடைச்சுதா என்ன? (செர்வரிடம்) போரும்பா!"
"சம்பளத்துக்கொண்ணும் குறைச்சல் இல்லை! 5000 ரூபாய். ஆனா என்னமோ computer business பண்ணப்போறானாம்"
"computer business-ஆ? தனியாவா?"
"இல்லை! ஏதோ ஒரு உதவாகரையோட. அவன் மொதல்ல இங்க அஹமதாபாத்ல எதோ computer தட்டிகிட்டுருந்தானாம். அப்ரம் france போய் அங்க கொஞ்ச நாள் குப்பை கொட்டிகிட்டிருந்தான்! இப்போ அதையும் விட்டுட்டு இங்க வநது company start பண்ணப் போறானாம். அதுக்கு நம்ம ஆளு மண்டையாட்டி இருக்கார்."
"(ஏப்பம்) அய்யோ! இப்படி ஒரு இடத்துல நிலையா இல்லாம யாராவது தாண்டுவாங்ளா என்ன? சரி business-கு காசு?"
"அதை ஏன் கேக்கரை? அவன் wife பணம்! வெக்கமில்லாம கடன் வாங்கிருக்கான். கஷ்ட்டம்!"
"அடக் கடவுளே! இது எங்கயாவது பார்த்ததுண்டா?"
"அவனை விடு! என்க்கு என் பையனைப் பத்தி கவலை. இவன் முடிவா இருக்கான். என்ன IIT-ல படிச்சு என்ன ப்ரயோஜனம்? மூளை இல்லயே? இன்னும் கொஞ்ச நாளில் இவன் friend இதையும் விடப்போறான்! இவன் தெருவில் நிக்கப் போறான்! அதுதான் ஆகப் போறது"(தண்ணீர் குடிக்கிறார்)
(செர்வரிடம்) "கொஞ்சம் மோர் ஊத்துப்பா! "
"இந்த காலத்துப் பசங்க.....(யோசிக்கிறார் சிவாநந்த்) "நான் வேணும்னா பேசிப் பாக்கறேனே?!"
"அவன் கேக்கமாட்டான்! எதுக்கு வீணா?" (ஏப்பம்)
Bill வந்தது. நான் pay பண்றேன் என்று சிவானந்த் purse-ஐ எடுத்து பணம் செலுத்தினார்.
"போலாமா?"
வெங்கட் மண்டையையட்ட, ஒருசேர எழுந்தார்கள். ஹோட்டல் வாசலையடைந்ததும், திடீரென்று வெளிச்சம் மார அரைத்தூக்கத்திலிருந்து எழுப்பப் பட்டவன் போல் சட்டென்று பேசத் தொடங்கினார் சிவானந்த்"
"இல்லை நான் பேசறேன் உன் பையனிடம். இந்த sunday வீட்ல இருப்பானா?"
"ம்ம்ம்"
"அப்போ அன்னிக்கே வறேன்!"
"ஏதோ! உன் இஷ்டம்!"
"நீ அந்தப் பையனை பாத்தியா?"
"யாரு அந்த Business idea கொடுத்தவனையா? ம்ம்ம்ம். ஒண்ட்ரை கண்ணும் அதுவுமா, பார்த்தாலே நம்பிக்கையே வரலை!" என்று வெங்கட் அலுத்துக்கொள்ளவும், இருவரும் office உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. வெங்கட் "சரி! பாப்போம்" என்றார்.
"ம்ம்ம்...." என்று கூறி, பிரியும் தருவாயில் ....
"அந்தப் பைய்யன் பெயர் என்ன கேட்டியா?" என்றார் சிவா.
"ம்ம்ம்ம்....நாராயண மூர்த்தி"